உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் வள்ளலார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் செல்வம், 56. இவர், நேற்று காலை 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' இருசக்கர வாகனத்தில், கூடுவாஞ்சேரி வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, ஊரப்பாக்கம்- அருகே அய்யஞ்சேரி சாலையில், பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை