உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புது மேல்நிலை தொட்டி பயன்பாட்டிற்கு திறப்பு

புது மேல்நிலை தொட்டி பயன்பாட்டிற்கு திறப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம் பழையனுார் ஊராட்சியில், அரசு நலப்பள்ளி அருகே, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குழாய் வாயிலாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.அதன்படி, 'பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா' திட்டத்தின் கீழ், 2022 - -23ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் பதித்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டது. இதன் திறப்பு விழாவில், நேற்று ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி