உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை கலெக்டர் ஆபீஸ் வரை மாநகர பஸ் இயக்க கோரிக்கை

செங்கை கலெக்டர் ஆபீஸ் வரை மாநகர பஸ் இயக்க கோரிக்கை

செங்கல்பட்டு, செங்கல்பட்டு -- திண்டிவனம் சாலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன.இந்த அலுவலகங்களுக்கு, செங்கை புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு சேவைகளைப் பெற பயனாளிகள் வந்து செல்கின்றனர்.மேற்கண்ட அலுவலகங்களுக்கு வரும் மக்கள், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மாற்று பேருந்து அல்லது ஷேர்ஆட்டோக்கள் வாயிலாக செல்லும் நிலை உள்ளது.எனவே, புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் பேருந்துகளை, கலெக்டர் அலுவலகம் வரை நீட்டிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கலெக்டர் அலுவலகத்திற்கு, வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க, ஏராளமானோர் வருகின்றனர்.ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, தாசில்தார் அலுவலகம் வந்து செல்கின்றனர்.செங்கல்பட்டு -- தாம்பரம் தடத்தில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், தடம் எண் எம்500 மாநகரபேருந்துகள், 30க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.இந்த பேருந்துகள், புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுவதால், 4 கி.மீ., தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகம் செல்ல சிரமமாக உள்ளது.எனவே, மாநகர பேருந்துகளை கலெக்டர் அலுவலகம் வரை நீட்டிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டால், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் மற்றும் தனியார் கலை கல்லுாரி மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோருக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ