உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகாலட்சுமி நகரில் சாலைகள் படுமோசம்

மகாலட்சுமி நகரில் சாலைகள் படுமோசம்

கூடுவாஞ்சேரி : நந்திவரம்,- மகாலட்சுமி நகர் பிரதான சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளது என, அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.அப்பகுதிவாசிகள் கூறியதாவது:நந்திவரம்- மகாலட்சுமி நகர் பிரதான சாலை, ஜி.எஸ்.டி., சாலையின் அருகில் உள்ளது. இந்த சாலையை, மகாலட்சுமி நகர் விரிவு, உதயசூரியன் நகர், ஜெயலட்சுமி நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த குடியிருப்புவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை, தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது.அதை சீரமைக்கக்கோரி, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்திருந்தோம். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை