| ADDED : ஜூன் 17, 2024 03:06 AM
கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி காரணைப்புதுச்சேரி பிரதான சாலை மற்றும் ராஜிவ்காந்தி நகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கால்வாயில், கழிவுநீர் தேங்கி உள்ளது.அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் குப்பைகள் தேங்கியுள்ளன. அவை, கழிவு நீர் கால்வாய்களில் சரிந்து, கால்வாய் அடைபட்டு கழிவுநீர் தேங்கிஉள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாகி, தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.இது குறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் கால்வாய்களை துார் வாரி சீரமைத்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.