உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் சார் - -பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு

செய்யூர் சார் - -பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு

செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில், சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது.செய்யூர் வட்டத்தில், லத்துார், சித்தாமூர், கடப்பாக்கம் உள்ளிட்ட 7 குறுவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிலத்தை வாங்கவும், விற்கவும், நிலத்தின் மதிப்பீடு அறிதல், பாகப்பிரிவினை, பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக, தினசரி நுாற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.இந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில், இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இதில் ஒன்று அலுவலக ஊழியர்களின் பயன்பாட்டிற்காகவும், மற்றொன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் உள்ளது.பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உள்ள கழிப்பறை மோசமாகவும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளதால், அலுவலகத்திற்கு வரும் பெண்கள் மற்றும் முதியோர், இயற்கை உபாதைகளை கழிக்க அவதிப்படுகின்றனர்.மேலும், சார் - -பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பத்திரப்பதிவிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சார் - பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் கழிப்பறைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை