உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சொர்ணவாரி நெல் விவசாயிகள் கோடை மழையால் மகிழ்ச்சி

சொர்ணவாரி நெல் விவசாயிகள் கோடை மழையால் மகிழ்ச்சி

பவுஞ்சூர் : செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியங்களில், 84 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தில், நெல், மணிலா, தர்பூசணி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.தற்போது, சொர்ணவாரிபருவத்திற்கு நெல் பயிரிட்டு, அதற்கான அடுத்தகட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நாற்று நடவு முறையை காட்டிலும், பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையையே கடைப்பிடித்துள்ளனர்.நாற்று நடவு முறை நெல் சாகுபடி காட்டிலும், நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் செலவு குறைவதோடு, மகசூல் சமமாக கிடைப்பதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.கடந்த மாதம் வெயில் வாட்டி வதைத்ததால், நெற்பயிர்கள் வாடிஇருந்தன.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மிதமான கோடை மழை காரணமாக, வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை