உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் விளையாட்டு திருவிழா

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் விளையாட்டு திருவிழா

சென்னை, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும், பிரபல 'பக்' கோப்பைக்கான விளையாட்டு திருவிழா நடைபெறும்.அந்தவகையில் 67ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள், நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கின.இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்று உள்ளனர். ஒய்.எம்.சி.ஏ.,வின் சென்னை மண்டல கல்லுாரியின் கல்வி இணை இயக்குனர் சுடர்கொடி, கல்லுாரியின் முதல்வர் ஜான்சன் பிரேம்குமார் உள்ளிட்டோர் போட்டியை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ