உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உரக்கடையில் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை

உரக்கடையில் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை

அச்சிறுபாக்கம், : ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம், 45. இவர், தொழுப்பேடு -- வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில், கீழ்அத்திவாக்கம் கூட்ரோடு பகுதியில், உரக்கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார். பின், நேற்று காலை கடைக்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள பிளாஸ்டிக், அலுமினியம் டப்பாக்கள் சிதறி கிடந்துள்ளன.இதுகுறித்து ஒரத்தி போலீசருக்கு, தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 'தலையில் தொப்பி அணிந்து, கடையின் உள்ளே சென்ற மர்ம நபர், பூச்சிக்கொல்லி மருந்து பொருட்களை திருடாமல், கல்லாப் பெட்டியில் இருந்த 300 ரூபாயை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை