உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆவின் பால் கிடைக்காமல் கூடுவாஞ்சேரியில் அவதி

ஆவின் பால் கிடைக்காமல் கூடுவாஞ்சேரியில் அவதி

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிகளில், ஆவின் தயாரிப்பு பொருட்களான ஆவின் பால், ஐஸ்கிரீம், நெய் போன்றவை, ஆவின் முகவர்கள் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.முகவர்களுக்கு, சோழிங்கநல்லுார், மாதவரம் போன்ற பகுதிகளில் இருந்து, ஆவின் தயாரிப்பு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தி வரும் பால் நிற பால் பாக்கெட்டுகள், கடந்த ஒரு வாரமாக கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதியில் கிடைக்கவில்லை என, வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ஆவின் முகவர்கள் கூறியதாவது:ஆவின் தயாரிப்பு பொருட்களில், நாங்கள் கொடுக்கும் ஆர்டர்களில், பாதிக்கும் குறைவாகவே எங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.மேலும், ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு கொடுத்த ஆர்டர்களில், ஒன்று கூட சப்ளை செய்யப்படவில்லை. இதனால், நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய இயலாமல் தவிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்