| ADDED : ஜூலை 16, 2024 04:52 AM
திருப்போரூர் : உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் டிசம்பர் பாண்டே, 45. இவர், சிட்லபாக்கத்தில் தங்கி, பெயின்டிங் வேலை செய்கிறார்.நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, வேலைக்காக பேருந்தில் வந்து, கோவளம் சந்திப்பில் இறங்கினார். அப்பகுதி பிரதான சாலையில் நடந்து சென்றார்.அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், டிசம்பர் பாண்டேவிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் இரு கைகளிலும், தலையிலும் வெட்டி, மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்து தப்பினர்.அந்த வழியாக சென்றவர்கள், காயமடைந்த டிசம்பர் பாண்டேவை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.