உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பரனுாரில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

பரனுாரில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவர் மனைவி குட்டியம்மாள், 47. மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், துாய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று காலை, வழக்கம் போல செங்கல்பட்டில் இருந்து பேருந்தில் வந்து, பரனுார் சுங்கச்சாவடியில் இறங்கி, பரனுார் ரயில் நிலையம் அருகில் நடந்து சென்றார்.அப்போது, குட்டியம்மாளை வழிமறித்த மர்ம நபர், அவரது கழுத்தில் இருந்த, 4 கிராம் தாலி செயினை பறித்துத் தப்பினார்.அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால், குட்டியம்மாள் கூச்சலிட்டும் யாரும் வரவில்லை. இது குறித்து, குட்டியம்மாள் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை