உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இளைஞர் விருது விண்ணப்பிக்க 31ம் தேதி வரை கால அவகாசம்

இளைஞர் விருது விண்ணப்பிக்க 31ம் தேதி வரை கால அவகாசம்

செங்கல்பட்டு:முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்க, முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் என, தலா மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.இந்த விருது, 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க, கடந்த 1ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது, இதற்கான கால அவகாசம், வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, வரும் ஆக., 15ம் தேதி, சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை