உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்கம்பங்கள் உடைந்து சேதம் கீழக்கரணையில் விபத்து அச்சம்

மின்கம்பங்கள் உடைந்து சேதம் கீழக்கரணையில் விபத்து அச்சம்

மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சி கீழக்கரணை பகுதியில், 2,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிற்கு, மறைமலை நகர் மின் வாரிய அலுவலகம் வாயிலாக, சாலை ஓரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக, ஜி.எஸ்.டி., சாலை, கீழக்கரணை சாலை, பெரிய செங்குன்றம் செல்லும் சாலைகளில், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் மின் கம்பங்கள் அமைத்து பல ஆண்டுகள் கடந்ததால், பல மின் கம்பங்கள் உடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது.இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சாலையில், கீழக்கரணை பேருந்து நிலையத்தின் அருகில், வரிசையாக உள்ள மின் கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன.அதே போல், மெல்ரோசாபுரம் - பெரிய செங்குன்றம் சாலையோரம் உள்ள மின் கம்பங்களும் உடைந்து காணப்படுகின்றன. பருவமழைக் காலம் துவங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடைந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை