உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேராசிரியர் வீட்டில் திருடியோர் சிக்கினர்

பேராசிரியர் வீட்டில் திருடியோர் சிக்கினர்

சென்னை : சென்னை, சைதாப்பேட்டை, வி.ஜி.பி., சாலையைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 47; பேராசிரியர். இரு தினங்களுக்கு முன், குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்று, நேற்று முன்தினம் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 14 சவரன் நகை திருடுபோனது தெரிந்தது.சைதாப்பேட்டை போலீசார் விசாரணையில், கிண்டியைச் சேர்ந்த சஞ்சய், 22, கே.கே.நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், 19, என தெரிந்தது. இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து, திருடிய நகை மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை