உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை கடை உரிமையாளர் உட்பட மூவர் கைது

தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை கடை உரிமையாளர் உட்பட மூவர் கைது

பவுஞ்சூர் : செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 28. இவர், பவுஞ்சூரில் தங்கி, அருகே உள்ள பாலுார் கிராமத்தில், மகேஷ், 29, என்பவருக்கு சொந்தமான மர செக்கு எண்ணெய் தயாரிக்கும் கடையில், கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.மேலும், மர செக்கு எண்ணெய் தயாரிக்கும் கடைக்கு அருகே, வாடகை கட்டடத்தில் சொந்தமாக பெட்டிக் கடை வைத்தும் வியாபாரம் செய்து வந்தார். செல்வம், அடிக்கடி கடைக்கு வராமல் விடுப்பு எடுப்பு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், செல்வம் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிக்காக, இரு தினங்களாக கடைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.இரண்டு நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் செல்வம் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் உரிமையாளர் மகேஷ் மற்றும் உறவினர்களான குமார், 43, குருசாமி, 33, ஆகியோர் சாலையில் நிற்க வைத்து, உன் பெட்டிக்கடையை திறக்கக் கூடாது என, எச்சரித்ததாக கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சல் அடைந்த செல்வம், வீட்டிற்குச் சென்று கடிதம் எழுதி வைத்து விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடிதத்தை கைப்பற்றிய உறவினர்கள், அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கைப்பற்றப்பட்ட கடிதத்தில், என் கடையை தரமாட்டேன் என்று சொல்லி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மகி, குரு ஆகிய இருவரும், என் தற்கொலைக்கு காரணம். ஆகையால். என் மரணத்திற்கு தகுந்த நஷ்ட ஈடை என் மனைவியிடம் கொடுக்க வேண்டும்' என, எழுதப்பட்டு இருந்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மகேஷ், குமார் மற்றும் குருசாமி ஆகிய மூவரை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை