| ADDED : ஜூலை 21, 2024 07:32 AM
தாம்பரம் : தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் எல்லையில் வரும் லாரி ஓட்டுனர்களிடம், போக்குவரத்து போலீசார் மாமூல் பெறுவதாக புகார் எழுந்தது.குறிப்பாக, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள கிரஷர்களுக்கு செல்லும் லாரிகளிடம் போக்குவரத்து போலீசார் நடத்திய வசூல் வேட்டை வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.இதுகுறித்து, தாம்பரம் காவல் புதிய கமிஷனர் அபின் தினேஷ் மோதக், விசாரணை நடத்தினார்.கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ், லாரி ஓட்டுனர்களிடம் மாமூல் வாங்குவதாக கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்புராஜை பணியிடை நீக்கம் செய்து, கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய, போக்குவரத்து போலீசார், இதேபோல் மாமூல் வசூலிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.இவர்கள் மீதும், தாம்பரம் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.அன்புராஜ்