உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் போக்குவரத்து நெரிசல்; மாட வீதிகளில் தத்தளித்த வாகனங்கள்

திருப்போரூரில் போக்குவரத்து நெரிசல்; மாட வீதிகளில் தத்தளித்த வாகனங்கள்

திருப்போரூர் ; முகூர்த்த நாளான நேற்று, திருப்போரூர் ஓ.எம்.ஆர்.., சாலை, மாடவீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுபமுகூர்த்த தினங்களில், ஏராளமானோர் வேண்டுதலை நிறைவேற்ற, தங்களின் இல்ல திருமணங்களை நடத்துகின்றனர்.இதன் காரணமாக, முக்கிய முகூர்த்த தினங்களில் ஏராளமானோர் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை தினங்களில் வரும் முகூர்த்த நாளில், ஏராளமானோர் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு படை எடுக்கின்றனர்.அந்த வகையில், விடுமுறை நாளான நேற்றைய முகூர்த்த நாளில், ஏராளமான திருமணங்கள் நடந்தன. அதுமட்டுமின்றி, கோவிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதி மற்றும் மற்ற தெருக்களில், 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த திருமண மண்டபங்களிலும் சுப நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் காரணமாக, ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு, நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நான்கு மாடவீதிகளிலும், வாகனங்களை பலரும் தாறுமாறாக நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சென்றுவிட்டனர். திருப்போரூர் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை