உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படாளத்தில் துணிகரம் நகை, பணம் திருட்டு

படாளத்தில் துணிகரம் நகை, பணம் திருட்டு

மதுராந்தகம்:படாளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், படாளம் காவல் எல்லைக்குட்பட்ட நடராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் மனைவி அஞ்சலை, 50.இவர், நேற்று வீட்டை பூட்டி விட்டு, தனக்கு சொந்தமான இரண்டு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.அதன்பின், மதியம் 1:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20,000 ரூபாய் மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், திருடு போன வீட்டில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை