மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
1 hour(s) ago
செய்யூர் : செய்யூர், பாளையர்மடம் பகுதியை சேர்ந்தவர் ராணி, 68. குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம், வீட்டின் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாண்டனர்.அப்போது, பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீப்பொறி, குடிசையின் மீது விழுந்து, குடிசை தீப்பற்றி எரியத் துவங்கியது.இதையறிந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். செய்யூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன், தீ மலமலவென பரவி குடிசை முழுதும் எரிந்து நாசமாகியது. தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.கடந்த ஆண்டும், இதே பகுதியில் இரண்டு குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago