உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுவள்ளூர் கிராமத்தினர் நிலம் எடுக்க ஆட்சேபனை

சிறுவள்ளூர் கிராமத்தினர் நிலம் எடுக்க ஆட்சேபனை

காஞ்சிபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துார் சுற்றிய 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.பொடவூர், பரந்துார், சிறுவள்ளூர் ஆகிய கிராமங்களில், நில எடுப்பு செய்வதற்கான அறிவிப்புகளை, நில எடுப்பு அலுவலகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.நில எடுப்புக்கு ஆட்சேபனை இருந்தால், தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, சிறுவள்ளூர் கிராமத்தில், நில எடுப்பு காரணமாக பாதிக்கப்படக் கூடியவர்களில், 50க்கும் மேற்பட்டோர், வெள்ளைகேட் பகுதியில் அமைந்துள்ள நில எடுப்பு அலுவலகத்தில் கூடினர்.அங்கு, நிலங்களை கையகப்படுத்தினால், வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி, ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ