உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடம் மாற்றப்பட்ட இ.பி., ஆபீஸ் ஆத்துாரில் மீண்டும் அமையுமா?

இடம் மாற்றப்பட்ட இ.பி., ஆபீஸ் ஆத்துாரில் மீண்டும் அமையுமா?

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், இளநிலை மின்வாரிய அலுவலகம், கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.இந்த மின் வாரிய அலுவலகம், கடந்த மாதம் திம்மாவரம் கிராமத்திற்கு, எந்த முன் அறிவிப்பும் இன்றி மாற்றப்பட்டது. இதனால், மின் கட்டணம் செலுத்த சிரமப்படு வதாக, கிராம மக்கள் புகார்தெரிவிக்கின்றனர்.இது குறித்து, ஆத்துார் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:ஆத்துார் மின் வாரிய அலுவலகம் வாயிலாக, வில்லியம்பாக்கம், ஆத்துார், கொளத்துார் உள்ளிட்ட கிராம மக்களுக்கு மின் வினியோ கம்செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதி மக்கள் மின் கட்டணம் செலுத்தவசதியாக இருந்து வந்தது.தற்போது, 3 கி.மீ., தொலைவில் மின்வாரிய அலுவலகம் மாற்றப்பட்டதால், வந்து செல்ல சிரமமாக உள்ளது.மின் அலுவலகம் அமைக்க, எங்கள் ஊராட்சியில் இடம் தர தயாராக உள்ளோம். எனவே,மீண்டும் ஆத்துார் கிராமத்தில் மின் வாரிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து, நேற்று முன்தினம் ஆத்துார் மீன் பண்ணையை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் அருண்ராஜிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை