உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கீழாமூர் வனப்பகுதியில் எச்சரிக்கை ஸ்டிக்கர் அமைக்கப்படுமா?

கீழாமூர் வனப்பகுதியில் எச்சரிக்கை ஸ்டிக்கர் அமைக்கப்படுமா?

மதுராந்தகம்:மேல்மருவத்துார், சோத்துப்பாக்கத்திலிருந்து எல்.எண்டத்துார், உத்திரமேரூர் வழியாக, காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இதில், ராமாபுரம் அடுத்த கீழாமூரில் உள்ள காப்புக்காடு வழியாக,2 கி.மீ., துாரம் சாலை உள்ளது.இந்த காப்பு காட்டில் மான், காட்டுப்பன்றி, உடும்பு, நரி, முயல்உள்ளிட்ட விலங்குகளும், மயில் உள்ளிட்ட பறவைகளும் உள்ளன.இந்த காப்புக்காட்டில்,கடந்த மாதம் தார் சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால், சாலையின் இரு புறங்களிலும் வெள்ளை நிறக் கோடுகள் மற்றும் இரவில் ஒளிரும் எதிரொளிப்பான் ஸ்டிக்கர்கள் அமைக்கப்படவில்லை.இதனால், இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி