உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் இன்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பிரசவம், சாலை விபத்துகளில் காயம் உட்பட பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு, புறநோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள், தங்களின் வாகனங்களை, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துகின்றனர்.இந்த வாகனங்களை, மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.அதுமட்டும் இன்றி, மருத்துவமனையில் உள்ள இரும்புக் குழாய்களையும் திருடிச் செல்கின்றனர். கடந்த மாதம், பிரசவ வார்டில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணியின் கழுத்தில் இருந்த செயினை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.அவரச சிகிச்சை பிரிவில், விபத்து, தீக்காயம், காயம் உள்ளிட்ட சிகிச்சைக்காக நோயாளிகள் சேர்க்கப்படுகின்றனர். அப்போது, விபத்தில் காயமடைந்தவருடன் வருவோர் குடிபோதையில், டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்கின்றன.அவசர சிகிச்சை பிரிவில் உள்ள புறக்காவல் நிலையத்தில், ஒரே ஒரு போலீசார் மட்டுமே பணியில் உள்ளார். அவரால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க முடியாத சூழல் உள்ளது.மருத்துவமனை வளாகத்தில், திருட்டு மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுக்க, புறக்காவல் நிலையம் அமைத்து, ஒரு சப் -- இன்ஸ்பெக்டர் தலைமையில், ஐந்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை