உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

கூவத்துார்:மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் லஷ்மிராம் முர்மு, 27; கடந்த இரண்டு மாதங்களாக முகையூரில் உள்ள தனியார் இறால் பண்ணையில் வேலை செய்து வந்தார்.நேற்று காலை 9:30 மணிக்கு தன் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட போது, சுவிட்ச் பாக்ஸில் மின்கசிவு இருந்ததால், மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார்.உடனடியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், லஷ்மிராம் முர்மு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கூவத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்