மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
7 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
11 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
11 hour(s) ago
செம்மஞ்சேரி, : செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 32. இவரின் வீட்டில் இருந்த பீரோவில், 13 சவரன் நகை திருடு போனது. இதுகுறித்து வழக்கு பதிந்த செம்மஞ்சேரி போலீசார், 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததுடன், வீட்டில் வேலை செய்தவர்களிடம் விசாரித்தனர்.இவர் வீட்டு மாடியில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மனீர்உசேன், 21, என்பவர் தங்கி, ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். இது தொடர்பாக, கோவிந்தராஜ் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியது தெரிய வந்தவுடன், திரிபுரா தப்பி செல்ல முயன்றார்.இதையடுத்து, போலீசார் மனீர்உசேனை பிடித்து விசாரித்ததில், பீரோவில் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். நேற்று, இவரை கைது செய்த போலீசார், 13 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
7 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago