துணை தாசில்தார்கள் 3 பேருக்கு பதவி உயர்வு
செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டத்தில், மூன்று துணை தாசில்தார்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில், துணை தாசில்தார்கள் பணியற்றி வந்தனர்.இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக, பதவி உயர்வு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.இந்நிலையில், கடந்தாண்டு நவம்பரில், 19 துணை தாசில்தார்களுக்கு, தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, மூன்று துணை தாசில்தார்களுக்கு, தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தார் பதவி உயர்வு பெற்றவர்கள் விபரம்
பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்ஆர். தமிழரசன் துணைதாசில்தார்(நிலம்), கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தனி தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுசி. நாராயணன் மண்டல துணை தாசில்தார், கருங்குழி, மதுராந்தகம் தாலுகா கண்காணிப்பாளர் தனி மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய நெடுஞ்சாலை திட்டம் செங்கல்பட்டுரமேஷ் மண்டல துணை தாசில்தார், வண்டலுார், வண்டலுார் தாலுகா அலுவலகம் தனி தாசில்தார் (முத்திரைதாள்) தனி மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை.