| ADDED : பிப் 11, 2024 11:37 PM
சென்னை: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் 35வது அனைத்து இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டிகள், இன்று முதல் 16ம் தேதி வரை சென்னையில் நடக்கின்றன.இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பு, தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி தலைமையில், அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில், நேற்று மாலை நடந்தது. இதில், அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி கூறியதாவது:தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 35வது ஹாக்கி போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளன. நாட்டில் உள்ள பல்வேறு அஞ்சல் வட்டங்களைச் சேர்ந்த 80 விளையாட்டு வீரர்கள் அடங்கிய, ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.இதற்கான துவக்க விழா இன்று காலை 9:00 மணிக்கு, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கிறது.தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் ம.பி., மாநிலங்கள் இடையே 10 லீக் ஆட்டம் நடக்கிறது. இறுதி போட்டி 16ம் தேதி காலையில் நடக்க உள்ளது. தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு நிறைவு விழா நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.