உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ் மீது லாரி மோதி விபத்து

பஸ் மீது லாரி மோதி விபத்து

மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி, நேற்று காலை50 பயணியருடன் அரசு பேருந்து சென்றது.பேருந்தில், ஆலங்குடியைச் சேர்ந்த பெரியதம்பி, 45, டிரைவராகவும், சுப்பையா, 50, நடத்துனராகவும் இருந்தனர். அரசு பேருந்து மறைமலை நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது, அரியலுாரில் இருந்து சென்னை நோக்கி, சிமென்ட் ஏற்றி வந்த லாரி, அரசு பேருந்தின் பின் பக்கத்தில் மோதியது.இதில், லாரியின் முன் பக்கம் முழுதும் சேதமடைந்தது. லாரியை ஓட்டி வந்த விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சந்துரு, 22, தப்பி ஓடினார்.லாரியில் வந்த மற்றொரு லாரி ஓட்டுனரான விருத்தாசலத்தை சேர்ந்த ராஜபாண்டியன், 36, என்பவருக்கு தலை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டது.நல்வாய்ப்பாக, பேருந்தில் வந்த பயணியர் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை