உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அமாவாசை வேள்வி பூஜை

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அமாவாசை வேள்வி பூஜை

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தை மாத அமாவாசையையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன், வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளினார்.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளாரை வணங்கி, அறுங்கோண யாக குண்டத்தில் சிறப்பு வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அதன்பின், நீண்ட வரிசையில் வந்த செவ்வாடை பக்தர்கள், யாக குண்டத்தில் சமத்துக்குச்சி, நவதானியம் உள்ளிட்ட பொருட்களை இட்டு சுவாமியை வணங்கினர்.இதில், தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, திருச்சி மாவட்டம், சீனுவாச நகர், கைலாசபுரம், திருவானைக்காவல் ஆகிய ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்கள் செய்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ