| ADDED : பிப் 11, 2024 11:37 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில், தனியார் ஏ.டி.எம்., உள்ளது. இந்த ஏ.டி.எம்., மையத்தின் சூப்பர்வைசராக, கூடுவாஞ்சேரி அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்ரமணியம், 33, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.நேற்று காலை, திம்மாவரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு வந்த போது, மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்றார்.அந்த நபரை மடக்கி பிடித்த வெங்கடசுப்ரமணியம், அவரை செங்கல்பட்டு தாலுகா போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன், 26, என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின், முத்துச் செல்வனை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.