உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுச்சேரி சாலையில் பாலம் பணி வாகனங்கள் புதிய தடத்தில் அனுமதி

புதுச்சேரி சாலையில் பாலம் பணி வாகனங்கள் புதிய தடத்தில் அனுமதி

மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலை - 332ஏ உள்ளது. இத்தடத்தில், மாமல்லபுரம் - முகையூர் வரையிலான 31 கி.மீ., பகுதி, நான்கு வழிப் பாதையாக, 670 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022, ஜூனில் பணிகள் துவக்கப்பட்டன.மாமல்லபுரம், வெங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மேம்பாலங்கள் மற்றும் சிறிய பாலங்கள் கட்டப்படுகின்றன. பாலம் கட்டுமானம் முடிந்த பகுதிகளில், இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. பழைய சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டி, கிராவல் மண் நிரப்பி, சமன் செய்து தரைமட்டத்தை உயர்த்தி, குறிப்பிட்ட இடங்களில், ஜல்லிக்கற்கள் நிரவப்பட்டுள்ளன.இந்நிலையில், பழைய சாலை பாலங்களை இடித்து புதிதாக கட்டவும், புதிய சாலை அமைக்கவும் கருதி, மணமை, குன்னத்துார் பகுதிகளில், விரிவாக்கம் செய்யப்பட்ட தடத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது.அதன் வழியே வாகனங்கள் செல்லவும், சாலை அமைக்கும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பழைய சாலை பாலங்களை இடித்து, புதிதாக அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி