மேலும் செய்திகள்
கந்தசுவாமி கோவில் மண்டபம் கட்டுமான பணிகள் வேகம்
3 minutes ago
முதலை பண்ணை அருகே வாகனங்களால் இடையூறு
6 minutes ago
பாலுார் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு
8 minutes ago
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை
12 minutes ago
செங்கல்பட்டு:மஞ்சப்பை விருதுகள் பெற பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஊக்குவிக்கிறது. நிறுவன வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலமாக, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும். வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும், முன்மாதிரியான பங்களிப்பை செய்த பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு, 'மஞ்சப்பை' விருதுகள் வழங்கப்படுகின்றன. மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த தலா மூன்று பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. முதல் பரிசாக 10 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 5 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் 2026 ஜன., 15ம் தேதிக்குள், கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
3 minutes ago
6 minutes ago
8 minutes ago
12 minutes ago