உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புயலால் நடைபாதை கூரை சேதம் மீண்டும் ஓடுகள் அமைக்கப்படுமா?

புயலால் நடைபாதை கூரை சேதம் மீண்டும் ஓடுகள் அமைக்கப்படுமா?

அச்சிறுபாக்கம்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் மார்வர் அரசினர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டது.இதை தவிர்க்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இது, கடந்த 2022ம் ஆண்டு 'மாண்டஸ்' புயலின் காரணமாக சேதமடைந்தது.இதன், மேற்கூரையில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஓடுகள் உடைந்து, விபத்து ஏற்படும் வகையில் காற்றில் ஊசலாடி கொண்டிருந்தன.இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனேயே இப்பகுதியை கடந்து சென்றனர். அதன்பின், 2023ல் இரும்பு நடைபாதை மேற்கூரையின் மீது அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஓடுகள் அகற்றப்பட்டன.மேற்கூரை அகற்றப்பட்டு ஓராண்டாகியும், இதுவரை மீண்டும் மேற்கூரை அமைக்கப்படாமல் திறந்தவெளியில் உள்ளது. கோடைகாலம் வருவதையொட்டி, வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும். எனவே, புதிதாக மேற்கூரைகள் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை