காயரம்பேடு மயானத்திற்கு
சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடுகுளக்கரை அருகில், சுடுகாடு மற்றும் இடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு பிரதான சாலை அருகில் அமைந்துள்ளது.அதனால், இறந்தவர்களின் உடலை எரிக்கும் போது, சாலையின் ஓரமாக எரிமேடு இருப்பதால், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் மாணவர்கள், பணிக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் என, பலரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.எனவே, சாலை ஓரமாக உள்ள சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ரேணுகாதேவி, காயரம்பேடு.அனுமதி கிடைப்பதில் தாமதம்
சாலையை சீரமைப்பதில் சிக்கல்
திருப்போரூர் ஆறுவழிச்சாலை அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புக்கு செல்லும் பிரதான சாலை, திருப்போரூர் கந்தசுவாமிகோவிலுக்கு சொந்தமானது. இச்சாலை குண்டும்குழியுமாக உள்ளது.முறையான அனுமதி கிடைக்காததால், சாலையை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டுவருகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம், கந்தசுவாமி கோவில் நிர்வாகம் ஆலோசனை செய்து, விதிவிலக்கு அளித்து சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.கிருஷ்ணன், திருப்போரூர்.சீமைக்கருவேல மரங்களால்
வாகன ஓட்டிகள் அவதி
பாலுார் -- கண்டிகை சாலையில், கொளத்தாஞ்சேரி பகுதியில், நெடுஞ்சாலை ஓரங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, சாலையை ஆக்கிரமித்து உள்ளன.அவை, வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளன. எனவே, இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.ராஜேஷ், செங்கல்பட்டு