உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காங்., வக்கீல் பிரிவின் அரசியலமைப்பு கருத்தரங்கம்

காங்., வக்கீல் பிரிவின் அரசியலமைப்பு கருத்தரங்கம்

மாமல்லபுரம்: தமிழக காங்கிரசின் வழக்கறிஞர் பிரிவு சார்பில், அரசியலமைப்பு கருத்தரங்கம், மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன்காரணை தனியார் விடுதியில், அப்பிரிவின் தலைவர் சந்திரமோகன் தலைமையில் நேற்று துவங்கியது. இதில், தமிழக காங்., கட்சி தலைவர் அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் கட்சி தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அழகிரி பேசியதாவது:காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களிலும், மாநில கட்சிகளுடன் போட்டியிட்டு, பல பிரச்னைகளை சந்தித்துள்ளது.அவர்களிடம் தோல்வி அடைந்துள்ளது; வெற்றியும் பெற்றுள்ளது. ஆனாலும், அரசியல் காரணங்களுக்காக, நாம் கூட்டணியில் இணைகிறோம்.பெரும்பாலானவை தீர்விற்கு வந்த பின், அதுகுறித்து விமர்சிப்பது, எதிராக செயல்படுவது, பழைய கதைகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவது ஆரோக்கியமான அரசியல் கட்சிக்கு ஏற்புடையதல்ல.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை