உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கந்தசுவாமி கோவில் மண்டபம் கட்டுமான பணிகள் வேகம்

 கந்தசுவாமி கோவில் மண்டபம் கட்டுமான பணிகள் வேகம்

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதேபோல், கந்தசுவாமி கோவிலில் திருமணம் செய்ய வேண்டுதல் இருப்பதாலும், போக்குவரத்து வசதி இருப்பதாலும், திருப்போரூர் பகுதியில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதியில் முகூர்த்த நாட்களில், ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. இதை கருத்தில் கொண்டு 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம், 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடுதி, 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும், பெரிய அளவில், 500 பேர் அமரும் வகையில், திருமண மண்டபம் கட்டவும், கோவில் இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கவும், வருமானத்தை அதிகப்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காக திருமண மண்டபம் கட்ட, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், திருப் போரூர்- திருக்கழுக்குன்றம் சாலையை ஒட்டி, தண்டலம் ஊராட்சியில் அடங்கிய எடையான்குப்பம் கிராமத்தில், 6.36 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் துவங்கி, தீவிரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை