உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அஞ்சூரில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

 அஞ்சூரில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

சிங்கபெருமாள் கோவில்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள அஞ்சூர் கிராமத்தில், சேதமடைந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய கம்பங்கள் அமைக்கப்பட்டன. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் இங்கு, பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, அஞ்சூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அஞ்சூர் கிராம சாலையோரம் மற்றும் தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள், கடுமையாக சேதமடைந்து இருந்தன. பல மின்கம்பங்கள் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, முறிந்து விழும் நிலையில் இருந்தன. இதனால், விபத்து அபாயம் நிலவியது. இதுகுறித்து, கடந்த 5ம் தேதி, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அஞ்சூர் மின் வாரிய அதிகாரிகள், கிராமத்தில் கடுமையாக சேதமடைந்து இருந்த ஐந்து மின் கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பங்கள் நட்டு இணைப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி