|  ADDED : பிப் 29, 2024 09:05 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
மதுராந்தகம்,:மதுராந்தகம் அருகே புளியரணங்கோட்டை ஊராட்சிக்குட்பட்டு, தென்னம்பட்டு கிராமம் உள்ளது.இங்கு, பவுஞ்சூர்- - முதுகரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, தென்னம்பட்டு கிராமத்திற்கு செல்லும் கப்பி சாலை உள்ளது.இச்சாலையை ஒட்டி, ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து வருகிறது.சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதவாறு உள்ளது. மழை வெள்ள பாதிப்பால், அதிக பாதிப்புக்கு உள்ளாகும், 350 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.மேலும், இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வரும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, சாலையோரம் மின் கம்பம் அமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.