உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / களத்துாரில் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

களத்துாரில் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த களத்துார் ஊராட்சியில், ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில், 2,100 மீட்டர் துாரத்திற்கு, புதிதாக தார் சாலை அமைக்கும் பணி, 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.இந்த சாலையில், 9 சிறிய பாலங்கள் அமைக்கும் பணி, நடந்து முடிந்துள்ளது. தற்போது, சாலை பணி துவங்கி பல மாதங்களாகியும், இதுவரை பணி முடிவு பெறாமல், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, கடந்த 20 நாட்களாக கிடப்பில் உள்ளது.இதனால், இந்த வழியை பயன்படுத்தும் விவசாயிகள், விவசாயக் கருவிகள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதில் பெரும் சிரமம் அடைகின்றனர்.எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி