| ADDED : டிச 25, 2025 06:30 AM
கல்பாக்கம்: அணுசக்தி மையத்தில், கதிரியக்க அவசரநிலை ஒத்திகை நடத்தப்பட்டது. கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்களும், இங்கு இயங்குகின்றன. அணுமின் நிலையத்தில் இருந்து, கதிரியக்கம் வெளியேறினால், அதே வளாகத்திற்குள் கட்டுப்படுத்தும் செயல்முறைகளை பரிசோதிக்க, அவசரநிலை ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஒத்திகை, நேற்று நடத்தப்பட்டது. கதிரியக்கம் பரவுவதாக கருதி, மாலை அறிவிக்கப்பட்டது. அனைத்து நிறுவனங்களைச் சேர்ந்த, 6,000 ஊழியர்களை, வெளியேற்றி, அவசரகால முகாம் பகுதியில் ஒருங்கிணைத்தனர். ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்தனர். பாதிப்பை தவிர்க்க அயோடினாக, சாக்லேட் வழங்கப்பட்டது. அவசரநிலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை கதிரியக்கம் பாதிக்காததாக, அடையாள பேட்ஜ் வழங்கப்பட்டது. வாகனங்கள் மூலம், கதிரியக்கம் பரவாமல் தடுக் க, அவற்றில் தண்ணீரை பீய்ச்சிய பிறகே வெளியேற அனுமதிக்கப்பட்டன. மூன்றரை மணி நேரம் ஒத்திகை நடத்தப்பட்டது. ஒத்திகை குழு தலைவர் - அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா கண்காணித்தார். அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய, பிற அணுசக்தி நிறுவன பிரதிநிதிகள் ஆய்வு செய் தனர்.