| ADDED : பிப் 17, 2024 01:25 AM
மதுராந்தகம்,:அரையப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சிதிலமடைந்து பல ஆண்டுகளாகியும், அதை சீரமைக்க, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது, பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு அரையப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையோரம், பெண்கள் பயன்பாட்டிற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.இந்த வளாகத்திற்குள் கழிப்பறை, குளியலறை, மின் மோட்டாருடன் நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகியவற்றுடன் கட்டப்பட்டது.தற்போது, சேதமடைந்து பயன்படுத்தப்படாமல் சீரழிந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தை, சீரமைக்க கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.