உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே கடுகுப்பட்டு கிராமம், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன், 47; விவசாயி. இவர், கடந்த 13ம் தேதி தனக்கு சொந்தமான வயல்வெளியில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.அப்போது, வயல்வெளியில் இருந்த விஷ பாம்பு மாரியப்பனின் வலது காலில் கடித்தது. உடனே, அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை