உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  11 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

 11 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயல் காரணமாக கடந்த 11 நாட்களாக வீட்டில் முடங்கியிருந்த மீனவர்கள், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். செங்கல்பட்டு மாவட்ட கடற்கரைப் பகுதிகளான கானத்துார் ரெட்டிகுப்பம் முதல், இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, 75 கி.மீ.,யில், 51 மீனவ பகுதிகள் அமைந்து உள்ளன. வாழ்வாதார தொழிலாக, 7,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு, 'பைபர்' படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். தற்போது, வடகிழக்கு பருவ மழையை ஒட்டி, வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24ம் தேதி முதல், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்தது. தற்போது 11 நாட்கள் கடந்த நிலையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், தொடர்ந்து 10 நாட்களாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மழைக்கால நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை