உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  குடிநீர் குழாய் அமைக்க செங்கையில் நிதி ஒதுக்கீடு

 குடிநீர் குழாய் அமைக்க செங்கையில் நிதி ஒதுக்கீடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பழைய குடிநீர் பகிர்மான குழாயை மாற்றிவிட்டு, புதிய குழாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. செங்கல்பட்டு நகராட்சியில் அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, சப் - கலெக்டர் பங்களா அருகே நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து, பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக செல்லும் குடிநீர் பகிர்மான குழாய், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி பழுது ஏற்படுவதால், மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியாத சூழல் இருந்தது. மக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பழைய ஜி.எஸ்.டி., சாலையில் புதிதாக குடிநீர் பகிர்மான குழாய் அமைக்க, 6.90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதேபோன்று, பழவேலி நீரேற்று நிலையத்திலிருந்து பச்சையம்மன் கோவில் தெருவிற்கு செல்லும், பழுதடைந்த குடிநீர் பகிர்மான குழாயை அகற்றிவிட்டு, புதிதாக குழாய் அமைக்க 5.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்படும் என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை