உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலையோரத்தில் குப்பை குவிப்பு பொலம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

 சாலையோரத்தில் குப்பை குவிப்பு பொலம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

சித்தாமூர்: பொலம்பாக்கம் கிராமத்தில், சாலையோரம் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் மற்றும் சரவம்பாக்கம் பகுதியில் அதிக அளவில் இறைச்சிக் கடை, காய்கறிக் கடை, உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராம அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன், இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தடுப்பு அமைத்தனர். நாளடைவில் இந்த தடுப்புகள் சேதமடைந்ததால், தற்போது மீண்டும் வியாபாரிகள் இந்த பகுதியில், குப்பையை கொட்டி வருகின்றனர். உணவுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்டவை இங்கு கொட்டப்பட்டு வருவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் பொலம்பாக்கத்தில் ஆய்வு செய்து, குப்பை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி