உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மண்ணிவாக்கம் கூட்டுச்சாலையில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

மண்ணிவாக்கம் கூட்டுச்சாலையில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம்கூட்டுச் சாலையில், சிக்னல்இருந்தும் செயல்படாமல் உள்ளது. இந்த சாலையில், தாம்பரத்தில் இருந்து முடிச்சூர் வழியாகவும், பெருங்களத்துார், வண்டலுார் வழியாகவும், படப்பை, வாலாஜாபாத், காஞ்சிபுரம்போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று திரும்புகின்றன.இந்த சந்திப்பில்சிக்னல்கள் இருந்தும், அவை செயல்படாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரும் இல்லாததால், இருசக்கர வாகனத்தில் வருவோர் கனரக வாகனத்தில் சிக்கி, அடிக்கடி விபத்துகளில் பாதிக்கப்படுவது தொடர்கிறது.எனவே, மண்ணிவாக்கம் சந்திப்பில் சிக்னல்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி