உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண் மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டா ராணுவ பயிற்சி மையத்தில் விசாரணை

பெண் மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டா ராணுவ பயிற்சி மையத்தில் விசாரணை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சி முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்கு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்த பயிற்சி வழங்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை இந்த பயிற்சி மையத்தில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த மோகன் மனைவி ஜெயலட்சுமி என்பவரின் உடலின் மீது துப்பாக்கி தோட்டா பட்டது. நல்வாய்ப்பாக, அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். செங்கல்பட்டு தாசில்தார், வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் சென்னேரி கிராமத்தை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.அதேபோல, ராணுவ பயிற்சி மையம் உள்ள பகுதி, மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், அங்கு மறைமலை நகர் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்து சுப்ரமணியம் மற்றும் அனுமந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை