உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மது பாட்டில் கடத்தியோர் கைது

மது பாட்டில் கடத்தியோர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பாலுார், மேலச்சேரியில், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காஞ்சிபுரம் நோக்கி, 'பஜார் பல்சர் என்.எஸ்' பைக்கில் வந்த இரண்டு நபர்களை மடக்கி சோதனை செய்த னர். அவர்களிடம், 95 மது பா ட்டில்கள் இருந்தன. இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த சீயமங்கள் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், 27, அவரது நண்பரான கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நாகதேவன்,26, என தெரிந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். 95 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை