உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு

வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட,சிங்காரத்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் தரணிதரன், 22, இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, கம்பெனிக்கு வேலைக்கு செல்வதற்காக வண்டலுார் இரணியம்மன் கோவில் அருகில் ஜி.எஸ்.டி. சாலையில் அலுவலக காருக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக, வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென, தரணிதரன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, மொபைல் போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.இதுகுறித்து, தரணிதரண் நேற்று ஒட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தி இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி